சிக்கலில் உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே, சுப்ரியா சுலே

The complaints were referred to the Central Board of Direct Taxes (CBDT) a month ago and a reminder has been sent recently, they said.

0
119

மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனா தலைவருமானஉத்தவ் தாக்கரே, அவரின் மகன் ஆதித்யா தாக்கரே, தேசியவாத கட்சியின் எம்.பி.யும், சரத்பவாரின் மகளுமான சுப்ரியா சுலே ஆகியோர் பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல் அளித்ததாகப் புகார் எழுந்ததையடுத்து, அதை விசாரிக்க மத்திய நேரடிவரிகள் வாரியத்துக்கு (சிபிடிடி) தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இந்த 3 பேர்மீது ஏற்கெனவே பல புகார்கள் வந்ததால், அதுகுறித்து விசாரிக்க நேரடி வரிகள் வாரியத்துக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியிருந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நேரடி வரிகள் வாரியம் விரைந்து விசாரிக்க, மீண்டும் நினைவூட்டல் கடிதத்தை தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே, சுப்ரியாசுலே ஆகிய 3 பேரும் வேட்புமனுத் தாக்கலின்போது அளிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்ட சொத்துகள் குறித்து முறையாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

“இந்த நடவடிக்கை வழக்கமானது. வருமான வரித்துறை, வாக்குமூலத்தில் கொடுக்கப்பட்டுள்ள வேட்புமனு ஆவண தகவல்களை குறுக்கு சோதனை செய்வது வழக்கமான செயல். தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறை பொதுவாக தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றன. எனவே இந்த பிரச்னையில் புதிதாக எதுவும் இல்லை” என்று சிவசேனா செய்தித் தொடர்பாளரும், போக்குவரத்து அமைச்சருமான வக்கீல் அனில் பராப் கூறியுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் “தேர்தல் ஆணையத்தின் வழக்கமான ஆய்வுதான். இதுமுதல் தடவையல்ல, பிரமாணப் பத்திரத்தில் உள்ள தகவல்கள் வருமானவரி வருமானத்துடன் ஒப்பிடப்படுகின்றன. இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், நாங்கள் அதற்கு பதிலளிப்போம்”என்றார்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 125 ஏ பிரிவின்படி, ஒருவர் வேட்புமனுத்தாக்கலில் தவறான தகவலைத் அளித்தது உண்மையென்றால், 6 மாதம் சிறை, அபராதம் அல்லது அபராதம் அல்லது இரண்டையும் இந்த பிரிவு வழங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here