தேவையான பொருட்கள் :

சிக்கன் கைமா – கால் கிலோ,
சின்ன வெங்காயம் – 50 கிராம்,
போண்டா மாவு – 250 கிராம்,
சிக்கன் மசாலா – 3 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் அரை – டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
பூண்டு – 5 பல்,
கறிவேப்பிலை – 2 ஆர்க்கு,
சோம்பு – ஒரு டேபிள்ஸ்பூன்,
மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – ஒரு கைப்பிடி அளவு,
பொட்டுக்கடலை – 50 கிராம்,
இஞ்சி – 2 சிறிய துண்டு,
கொத்தமல்லித் தழை – சிறிதளவு.
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை :

* எலும்பில்லா சிக்கனை நன்றாகக் கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து வைக்கவும்.

* மிக்சியில் சின்ன வெங்காயம், பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய், சோம்பு, மஞ்சள்தூள், பூண்டு, இஞ்சி, மிளகு, சிக்கன் மசாலா, உப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்றாக அரைத்த பின் கடைசியாக சிக்கனை போட்டு அரைத்து எடுக்கவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய கொத்தமல்லித்தழை, அரைத்த சிக்கன் கலவையைப் போட்டு நன்றாக வதக்கவும். சிக்கன் நன்றாக வெந்ததும், ஆறவிட்டு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் போண்டா மாவை போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் உருண்டைகளை மாவில் தோய்த்து எடுத்து, எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்து எடுக்கவும்.

* சூப்பரான மாலைநேர ஸ்நாக்ஸ் ஸ்பைஸி சிக்கன் போண்டா ரெடி.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்