சிக்கன் பாஸ்தா சூப்

0
1451

சிக்கன் பாஸ்தா சூப் சமையல்… அனைவரும் விரும்பும் ருசியான சிக்கன் பாஸ்தா சூப் ரெசிபியை சமைத்து பார்க்கலாம் வாங்க

சமைக்க தேவையானவை
 •  கோழிக்கறி – கால் கிலோ
 •  வெங்காயம் – ஒன்று
 •  காலிப்ளவர் – ஒரு கோப்பை
 •  மிளகுத்தூள் – அரை தேக்கரண்டி
 •  பூண்டு விழூது – அரைதேக்கரண்டி
 •  மஞ்சத்தூள் – அரைத்தேக்கரண்டி
 •  இஞ்சி விழுது – அரைதேக்கரண்டி
 •  கொத்தமல்லி – இரண்டு மேசைக்கரண்டி
 •  பாஸ்தா(அ)நூடுல்ஸ் – ஒரு கோப்பை
 •  எண்ணெய் – இரண்டு மேசைக்கரண்டி
 •  தண்ணீர் – நான்கு கோப்பை
 •  கேரட் – ஒரு கோப்பை

சிக்கன் பாஸ்தா சூப் உணவு செய்முறை : 
 • Step 1. முதலில் கோழியில் உள்ள எலும்புகளை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
 • Step 2. பின்பு வெங்காயம் மற்றும் எல்லா காய்களையும் நறுக்கி கொள்ளவும்.அடி கனமான ஒரு பாத்திரத்தில் எண்ணெயை காயவைத்து வெங்காயத்தை கொட்டி வறுக்கவும்.
 • Step 3. பிறகு கோழித்துண்டுகளை போட்டு நன்கு வேகும் வரை வதக்கவும்.பிறகு இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கிவிட்டு நறுக்கி வைத்த காய்களை போட்டு கிளறி விடவும்.
 • Step 4. தொடர்ந்து உப்புத்தூள்,மஞ்சத்தூள்,மிளகுத்தூளை தூவி நன்கு கிளறி விட்டு தண்ணீரை சேர்க்கவும்.பின்பு கொத்தமல்லியை தூவிவிட்டு கொதிக்கவடவும்.
 • Step 5. நன்கு கொதித்தவுடன் பாஸ்தாவை போட்டு கலக்கிவிடவும்.அடிப்பின் அனலை மிக குறைந்த அனலில் வைத்து அடி பிடிக்காதபடி அடிக்கடி கிளறிவிடவும்.
 • Step 6. பத்து நிமிடங்காள் கழித்து இறக்கி விடவும்.பிரியப்பட்டால் சிறிது சீஸ் தூளை சூடாக பரிமாறவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here