சர்கார் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் புகைப்பிடித்தலை ஊக்குவித்ததாகக் கூறி, சர்கார் தயாரிப்பாளர், விஜய், முருகதாஸ் ஆகியோர் தலா பத்து கோடி ரூபாய் அடையாறு புற்றுநோய் மருத்துவ மையத்துக்கு தர வேண்டும் என ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் தனது 62 வது படத்தில் நடித்து வருகிறார். இதற்கு சர்கார் என பெயர் வைத்துள்ளனர். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஜுன் 21 ஆம் தேதி வெளியாயின. இதில் ஒரு போஸ்டரில் விஜய் சிகரெட் புகைக்கும் படம் இடம்பெற்றிருந்தது. இதற்கு சிலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், சர்கார் போஸ்டரில் புகைப்பிடிப்பதை ஊக்குவித்திருப்பதாகக்கூறி விஜய், முருகதாஸ், படத்தின் தயாரிப்பாளர் ஆகிய மூவரும் தலா பத்து கோடி ரூபாய் அடையாறு புற்றுநோய் மையத்துக்கு தர வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இந்த பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் விஜய், முருகதாஸ், படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ஆகியோர் 2 வாரத்தில் பதிலளிக்கும்படி உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here