சிஏஏ எதிர்ப்பு போராட்டம்; வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்களுக்காக உணவு சமைத்து வழங்கும் இந்துக்கள்

0
380

குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்தக் கூடாது என்றும், சிஏஏ, என்.ஆர்.சிக்கு எதிராக சட்டமன்றத்தில் எடப்பாடி அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் இஸ்லாமியர்கள் 4வது நாளாக தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

பிப்ரவரி 14ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டத்தில் போலீசார்ர் நடத்திய வன்முறை வெறியாட்டம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி மாநில அளவில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட வித்திட்டுள்ளது.

இரவு, பகல் பாராமல் குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் வண்ணாரப்பேட்டை பகுதியில் குவிந்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களையும் எழுப்பி வருகின்றனர்.

இதற்கிடையே ஜனநாயக ரீதியில் போராடி வரும் மக்களைக் கலைக்க எடப்பாடி அரசு தனது காவல்துறையுடன் அவ்வப்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும், போராட்டக்காரர்கள் எதையும் எதிர்கொள்ளும் மனநிலையோடு தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here