இயக்குநர் சி.எஸ்.அமுதன் தனது ட்விட்டர் பக்கத்தில் சிஎஸ்கே அணியின் வெற்றி குறித்து கிண்டலாகப் பதிவொன்றை விட்டுள்ளார்.

12வது ஐபிஎல் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் மற்றொரு அணியைத் தீர்மானிக்கும் 2-வது தகுதிச் சுற்று போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதிய இப்போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதிப்போட்டியில் மீண்டும் மும்பை அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது.

இந்நிலையில் ‘தமிழ்ப்படம்’ இயக்குநர் சி.எஸ்.அமுதன், சிஎஸ்கே அணியின் வெற்றி தொடர்பாக “டெல்லிக்கு ஒரு நாளும் அடி பணிய மாட்டோம்” என்று தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசால், மற்றமாநிலங்களைப் போல தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை. இதனை டெல்லியுடனான வெற்றியை வைத்து தெரிவித்துள்ளார் என்று தெரிகிறது.

மேலும், ஐபிஎல் போட்டிக்கான முதல் தகுதிச்சுற்று போட்டியில் “ரன்னர் கோப்பையைப் பெற வெற்றி பெற்றுள்ள மும்பை அணிக்கு வாழ்த்துகள்” என்று சி.எஸ்.அமுதன், சிஎஸ்கே அணியை வீழ்த்தி மும்பை அணி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றதற்கு தனது டிவிட்டர் பதிவில் அப்படி ஒரு கிண்டலான வாழ்த்தொன்றைத் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here