சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் 328 மருந்துகளின் , விற்பனையையும் , விநியோகத்தையும் உடனே தடைசெய்ய உத்தரவிட்டிருக்கிறது . மேலும் 6 மருந்துகளுக்கு கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது . இந்த தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது

இந்த 328 மருந்துகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு விதமான கலவை (Fixed Dose Combination- FDC) இருக்கிறது .இது இந்திய மருந்து தொழிற்துறையால் உருவாக்கப்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகளின் கலவை .

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்ட செய்தி சுமார் 6000 பிராண்டுகள் இதனால் பாதிக்கக்கூடும் என்று கூறுகிறது. . இந்த மருந்துகளில் வலி நிவாரணியான சாரிடான், தோல் வியாதிக்கு பயன்படுத்தபடும் க்ரீம் பேண்டெர்ம், சர்க்கரை நோய் காம்பினேஷன் மருந்து குளூகோனாம் பி.ஜி, ஆன்டிபயாட்டிக் லுபிடிக்ளாக்ஸ் , பாக்டீரியா எதிர்ப்பு டேக்சிங் ஏ.இசட் ஆகியவை அடங்கும்.

Screen Shot 2018-09-13 at 2.11.04 PM

மருத்துவ தொழில்நுட்ப குழு, 328 மருந்து பொருட்களை தடை செய்யலாம் என அறிவித்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை குழு அளித்த ஆய்வு அறிக்கையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சந்தையில் இந்த மருந்துகளின் மதிப்பு ரூ 2000 கோடியிலிருந்து ரூ2500 கோடி ஆகும் என்று நியூஸ் 18 ஆங்கிலம் செய்தி வெளியிட்டுள்ளது .

2016 ஆம் ஆண்டு அரசால் தடைசெய்யப்பட்ட மருந்துகளான இருமல் மருந்து கோரக்ஸ், டி கோல்ட் டோட்டல், ஆகியவை இந்த வருடம் தடைசெய்யப்பட்ட மருந்துகள் பட்டியலில் இல்லை. மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு மார்ச் , 2016 இல் 344 மருந்துகளை , விற்பனை செய்யவும் , விநியோகம் செய்யவும் தடை செய்து அறிவிப்பு வெளியிட்டது.

இந்த மருந்துகளின் மீதான தடை மருத்துவத் துறையின் லாபத்தை பாதிக்கும். ஏனென்றால் இந்த எப்டிசி மருந்துகள் ஆயிரகணக்கில் இந்திய சந்தையை ஆக்கிரமித்துள்ளன. இந்த மருந்துகளை தடை செய்வதறு முன் மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியத்தை மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை என்று மருத்துவ துறை குற்றம்சாட்டியிருக்கிறது. மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் , ஆலோசனை வழங்கும் அமைப்பு , மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் (1940 இல் உருவாக்கப்பட்டது) பிரிவு 5 இன் கீழ இயங்குகிறது .

டிசம்பர் 2016 இல் எப்டிசி மருந்துகளை தடை செய்வதற்கான உத்தரவுகளை டெல்லி உயர்நீதிமன்றம் ஒதுக்கி வைத்தது . மத்திய அரசு இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது . மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் 26A பிரிவின்படி மத்திய அரசு மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியத்தின் ஆலோசனையை கேட்க தேவையில்லை என்று உத்தரவிட்டது . மேலும் எப்டிசி மருந்துகளை ஆய்வு செய்து அந்த அறிக்கையை மத்திய அரசிடம் வழங்க மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியத்துக்கு உத்தரவிட்டது .

தடைசெய்யப்பட்ட 328 எப்டிசி மருந்துகளுக்கும் குணமாக்கும் திறன் இல்லை என்றும் இந்த மருந்துகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் பரிந்துரை செய்தது . மேலும் இந்த மருந்துகளை விற்பனையையும் , விநியோகத்தையும் உடனே தடைசெய்யவும் பரிந்துரை செய்தது .

இந்த பரிந்துரையின் படியே மத்திய அரசு 328 எப்டிசி மருந்துகளை தடை செய்து செப்டம்பர் 7, 2018 அன்று அரசிதழில் அறிவிப்பு வெளியானது.

மார்ச் 10, 2016 ஆம் ஆண்டு தடைசெய்யப்பட்ட 344 எப்டிசி மருந்துகளில் , 15 மருந்துகள் 1988 ஆம் ஆண்டுக்கு முன்னமேயே உற்பத்தியை தொடங்கிய காரணத்தினால் தற்போது தடை மருத்துகளின் பட்டியலில் இல்லை .

இந்த 344 மருந்துகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு விதமான கலவை (Fixed Dose Combination) இருக்கிறது . இந்த வகையான 25000 மருந்துகள் ரூ 1.10 லட்சம் கோடிக்கு இந்த சந்தைகளை ஆக்கிரமித்துள்ளன.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆதலால் இந்தக் கலவையை சேர்த்து தயாரிக்கும் மருந்துகளை பெரும்பாலான சர்வதேச நாடுகள் தடை செய்துள்ளன. இவற்றை முறைப்படுத்த வேண்டி ‘மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம்’ மறுசீரமைக்கப்பட்டு 1988-இல் அமலுக்கு வந்தது.

Courtesy : Scroll.in

Times Of India

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here