சாய்னா நேவாலை மீண்டும் தாக்கிய கொரோனா

Saina Nehwal and HS Prannoy have been withdrawn from the Thailand Open and have to be isolated at a hospital in Bangkok for a minimum of 10 days.

0
60

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், வீரர் ஹெச்.எஸ்.பிரனாய் ஆகியோர் கொரோனாவிலிருந்து ஏற்கெனவே மீண்டாலும், மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் விளையாடுவதற்காக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், பிவி சிந்து உள்ளிட்ட வீராங்கனைகள் பாங்காங் சென்றுள்ளனர். போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணியினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் சாய்னா நேவால், ஹெச்.எஸ்.பிரனாய் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் இருவருக்கும் 10 நாட்கள் பாங்காக் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் இருவருடனும் நெருக்கமாக இருந்த அனுராக்காஷ்யப்பும் தனிமைப்படுத்தப்பட்டார் என்று இந்திய பாட்மிண்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மூன்று பேரும் தாய்லாந்தில் நடக்கும் பேட்மிண்டன் போட்டிகளில் விளையாடமாட்டார்கள். கடந்த மாதம் சாய்னா, பிரனாய், காஷ்யப், குருசாய்தத், பிரணவ் சோப்ரா ஆகியோருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டு, சிகிச்சையில் இருந்து குணமடைந்தனர்.

இந்நிலையில் கொரோனாவால் தான் பாதிக்கப்பட்டது குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார் சாய்னா நெவால். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

நேற்று எடுத்த கொரோனா பரிசோதனை முடிவு இன்னும் எனக்கு வழங்கப்படவில்லை. இதனால் குழப்பமாக உள்ளது. இன்று ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு, நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பாங்காக்கில் உள்ள மருத்துவமனைப் போகச் சொன்னார்கள். விதிமுறையின்படி, பரிசோதனை மேற்கொண்ட ஐந்து மணி நேரத்துக்குள் முடிவு கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

தாய்லாந்து ஓபன் போட்டி இன்று முதல் 17 ஆம் தேதி வரையிலும், டொயோட்டா தாய்லாந்து ஓபன் 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலும், பேட்மிண்டன் வேர்ல்ட் டூர் ஃபைனல் 27 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையிலும் நடக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here