டிவிட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வரும் ‘#BJPInsultsThiruvalluvar‘ எனும் ஹேஷ்டேக்கை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் பகிர்ந்துள்ளார்.

தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு மொழியில் மொழிபெயர்க்கபட்ட திருக்குறள் நூலை நேற்று வெளியிட்டுப் பேசினார்.

இதற்கிடையே, தமிழக பாஜகவின் டிவிட்டர் பதிவில் காவி நிற உடை, நெற்றியில் விபூதி, குங்குமம் பட்டையுடன் திருவள்ளுவர் படத்தை வெளியிட்டு, ‘கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாழ் தொழாஅர் எனின்’ என்ற குறளை பதிவிட்டிருந்தனர்.

மேலும், கடவுளை தூற்றி இறைநம்பிக்கை கொண்டவர்களை பழிப்பவர்களுக்கு அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்? அன்றே வள்ளுவர் சொன்னதை இன்று தி.க.வும், தி.மு.க.வை நம்பி வாழும் கம்யூனிஸ்ட்டுகளும், அவர்கள் சார்ந்த ஊடகங்களும் அறிந்து தெளிய வேண்டும் என பதிவிட்டிருந்தனர்.

பா.ஜ.க.வினர் வெளியிட்டுள்ள திருவள்ளூவர் படத்துக்கு தி.மு.க., கம்யூனிஸ்ட்டு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், திருவள்ளுவருக்கு மத அடையாள சாயத்தை பூசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘திருவள்ளுவரை அவமதித்த பாஜக’ என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் இந்த ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி டிவீட் செய்துள்ளார்.

அதில், 

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம்!

எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும்.

சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்!

#BJPInsultsThiruvalluvar என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here