சாம்சங் நிறுவனம் தனது புதிய மாடலான சாம்சாங் W2019 ஃப்ளிப் போனை சீனாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. சாங்காய் நகரில் W2019 ஃப்ளிப் போனை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. W2018 ஃப்ளிப் போனை தொடர்ந்து இந்த W2019 வெளிவந்துள்ளது.

Dr0X4MUU4AA7gBm

W2018 ஃப்ளிப் போன், 4.2 இன்ச் (1080×1920 பிக்ஸெல்ஸ்) புல் எச்.டி AMOLED டிஸ்பிளே, மற்றும் ஸ்னாப்டிராகன் 835, 6 ஜிபி ரேம் கொண்டிருந்தது. W2019 ஃப்ளிப் போனில் ஸ்னாப்டிராகன் 845 இருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

W2018 ஃப்ளிப் போன் மாடலில் 6ஜிபி ரேம், 64 ஜிபி/256ஜிபி மெமரி மற்றும் SD கார்டு சப்போர்ட் உடன், 12 மெகா பிக்ஸெல்ஸ் சென்சார் கொண்ட பின் பக்க கேமரா உடன் 5 மெகா பிக்ஸெல்ஸ் சென்சார் கொண்ட முன்பக்க கேமரா மற்றும் 2,300mAh பேட்டரி கொண்டிருந்தது.

சாம்சங் W2019 ஃப்ளிப் போனானது, புல் எச்.டி AMOLED டிஸ்பிளே மற்றும் ஸ்னாப்டிராகன் 845 கொண்டிருக்கும் என தெரிகிறது. பின்பக்கம் டூயல் கேமரா உடன் AI சென்சார் இருக்கலாம். மேலும், ஆண்ட்ராய்டு 8.1 ஒரியோ தொடக்கத்திலும், பின்னர் ஆண்டராய்டு 9 பை க்கு அப்டேட் ஆகும் என தெரிகிறது. இந்த ஸ்மார்போனாது மெட்டல் பாடி கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

Dr0-_WMX4AEARxV

இந்த வருடத்தில் வெளிவந்த கேலக்ஸி எஸ்9 மொபைலில் கொண்டிருந்த ஸ்னாப்டிராகன் வேரியண்ட் போல, W2019 மொபைலிலும் ஸ்னாப்டிராகன் 845 கொண்டிருக்கலாம் என தெரிகிறது.
முதல் ஃப்ளிப் மொபைலானது கடந்த நவம்பர் 2016ல் ஸ்னாப்டிராகன் 820 கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு W2018 மாடலை வெளியானது. இதுவரை இந்த ஃப்ளிப் போனின் விலை விபரம் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here