சாம்சங் நிறுவனம் புதிய ‘மாடுலர்’ டிவி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
‘மைக்ரோ எல்.இ.டி’ டிவி வரிசையில் அறிமுகமாகியுள்ள இந்த டிவியின் சிறப்பு, ஒரே திரை, நான்கு நிகழ்ச்சிகள் என்பதுதான். இந்த டிவியின் திரையை, விரும்பினால், நான்காக பிரித்து, நான்கு நிகழ்ச்சிகளை ஒரே சமயத்தில் காணலாம். நான்கு திரைகளின் ஒலி அளவுகளையும் தனித்தனியாக மாற்றி அமைத்துக் கொள்ளவும் முடியும்.

ஒரே சமயத்தில் நான்கு சேனல் செய்திகளை ஒருங்கே காண்பது என்பது சவுகரியமான ஒன்று தான். அல்லது வீட்டு பாதுகாப்புக்காக கதவருகில் பொருத்தியிருக்கும் கேமரா காட்சிகளை, ஒரு திரையில் ஓடவிட்டுவிட்டு, மற்றவற்றில் டிவி நிகழ்ச்சிகளை பார்த்துக்கொள்ளலாம்.
நான்காக மட்டுமல்ல, இரண்டுஅல்லது மூன்று திரைகளாகவும் இந்த டிவி திரையை நாம் விரும்பும்படி காணலாம் 110, 99, 88 அங்குல அளவுகளில் வந்துள்ள மாடுலர் டிவி, தொழில் வல்லுனர்கள் துணை இன்றி, நாமேசுவரில் மாட்டிக் கொள்ளலாம் என்கிறது சாம்சங் குறிப்பிட்டுள்ளது.