சாம்சங் செமிகண்டக்டர் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு மற்றும் புற்றுநோய் பாதிப்புகளுக்கு சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.

நோயால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களிடமும் , அவர்களுடைய குடும்பத்தினரிடமும் நாங்கள் மன்னிப்பு கோருகிறோம் என்று சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவர் கிம் கி நாம் தெரிவித்துள்ளார். எங்கள் செமிகண்டக்டர் மற்றும் எல்சிடி தொழிற்சாலைகளில் சுகாதாரம் தொடர்பான அபாயங்களை சரியாக நிர்வகிக்க தவறிவிட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு மன்னிப்பு கேட்டதன் மூலம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.

சாம்சங் செமிகண்டக்டர் மற்றும் டிஸ்பிளே தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 240 தொழிலாளர்கள், பணியிடம் தொடர்பான பல்வேறு உடல்நிலை பாதிப்புக்கு உள்ளாகினர். அதில் சுமார் 80 பேர் உடல்நிலை பாதிப்பால் உயிரிழந்து விட்டனர்.

இதில், 16 வகையான புற்றுநோய், மிக அரிதான உடல்நல பாதிப்பு, கருக்கலைப்பு, மற்றும் சில தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

மேற்கண்ட காரணத்தால் தங்களது குடும்ப உறவுகளை இழந்தவர்கள், இந்த மன்னிப்பும், இழப்பீடும், தொழிற்சாலையால் கடந்த காலங்களில் தாங்கள் சந்தித்த அவமரியாதைக்கு ஈடாகாது என்று கூறுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here