Samsung-Galaxy-J6-J4_2018

சாம்சங் நிறுவனம் தனது புதிய மாடல்களான கேலக்ஸி ஜெ4(J4) மற்றும் ஜெ6(J6) ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜே4(J4) மற்றும் ஜே6(J6) ஃபோன்கள் மே 21 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இணையத்தில் கசிந்த இவற்றின் சிறப்பம்சங்கள் :

ஜெ6(J6) மாடலை பொறுத்தவரையில் 5.6 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளேவுடனும், ஒக்டா-கோர்(octa-core)ப்ராசஸருடனும் வெளியாகிறது. அத்துடன் 3ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம் என்ற இரண்டு ரகங்களில் வழங்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் 16 எம்பி கேமராவும், முன்புறத்தில் 8 எம்பி சென்சார் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பின்புறத்தில் கைரேகை பதிவு செய்யும் சென்சார் உள்ளது. இதன் இன்டெர்னல் ஸ்டோரேஜ் 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என்ற இரண்டு ரகங்களில் வெளியாகிறது. இதுதவிர கூடுதலாக மைக்ரோ கார்டு பொருத்தும் வசதி உள்ளது. 3,000 எம்ஏஹெச் பேட்டரியுடன், இரண்டு சிம் கார்டு பொருத்தும் வசதி இதில் இருக்கிறது.

ஜெ4(J4) மாடலில் 5.5 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே உள்ளது. இதில் குவாட்-கோர்(quad-core )ப்ராசஸ்ர் இடம்பெற்றுள்ளது. இதிலும் 2 ஜிபி மற்றும் 3 ஜிபி ரேம் என்ற இரண்டு ரகங்கள் வெளியாகின்றன. அவற்றுக்கு ஏற்றார்போல் 16 ஜிபி மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டிருக்கும். பின்புறத்தில் 13 எம்பி மற்றும் முன்புறத்தில் 5 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு கேமராக்களுக்கும் எல்இடி ஃப்ளாஷ் லைட் உள்ளது. இதில் 2 சிம் கார்டுகள் பொருத்த முடியும். இதன் பேட்டரி 2,800 அல்லது 3.000 எம்ஏஹெச் ஆக இருக்கும். மேலும் ஜெ4 மற்றும் ஜெ6 ஆகிய இரண்டும் ஆண்ட்ராய்டு ஒரியோ 8.0 இயங்குதளம் கொண்டது.

இவற்றின் விலை முறையே கேலக்ஸி ஜெ4(J4) 8,500, மற்றும் ஜெ6(J6) 12,990.