சாம்சங் கேலக்ஸி நோட் 10 [Galaxy Note 10]

0
324

 சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி நோட் 10 மற்றும் நோட் 10+ வருகின்ற ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி நியூயார்க்கில் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இந்த டிவைஸ்கள் குறித்து புதிய புதிய அப்டேட்கள் மற்றும் சிறப்பம்சங்கள் வெளியாகி வருகின்றன.

ஈவன் ப்ளாஸ் என்ற புகழ்பெற்ற ட்விட்டர் கணிப்பாளர் வெளிவர இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்களில் சிறப்பம்சங்களை பட்டியிலிட்டுள்ளார். அதன்படி

கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் 6.3-இன்ச் AMOLED திரை கொண்டிருக்கும் என்றும், கேலக்ஸி நோட் 10 + ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் டிஸ்பிளெ கொண்டிருக்கும் என்றும் கூறியுள்ளார்.

கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 + என இரண்டு போன்களும் குவால்கோம் நிறுவனத்தின் 855+ ப்ரோசசர் மூலமாக இயங்க உள்ளது. இதற்கு முன்பு வெளியான 855 ப்ரோசசரை விட இந்த ப்ரோசசரின் பெர்ஃபார்மென்ஸ் மிகவும் சிறப்பாக உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ்ஜை பெற்றிருக்கும் என்று குறிப்பிட்ட அவர் கேலக்ஸி நோட் 10 + பற்றி குறிப்பிடவில்லை. இதன் ஸ்டோரேஜ் வேரியண்ட்கள் குறித்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் 3,600 mAh பேட்டரியை கொண்டுள்ளது. 45w ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15w ஃபாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜி மூலம் இதனை விரைவாக சார்ஜ் செய்து கொள்ளலாம். சாம்சங் கேலக்ஸி நோட் 10 ப்ளஸ் ஸ்மார்ட்போன் 4300 mAh பேட்டரியை கொண்டுள்ளது. எந்த சார்ஜிங் டெக்னாலஜியை இது சப்போர்ட் செய்கிறது என்பது இதுவரை தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here