சாம்சங் கேலக்ஸி ஜே6 இப்போது விலை குறைக்கப்பட்டு சந்தையில் விற்பனையாகி வருகிறது. இதில் 3 ஜி.பி. ரேம் மெமரி / 32 ஜி.பி. இன்பீல்ட் மற்றும் 4 ஜி.பி. ரேம் மெமரி / 64 ஜி.பி. இன்பீல்ட் என 2 வகைகளில் இந்த மொபைல் ஃபோன் கிடைக்கிறது.

3 ஜி.பி. ரேம் உள்ள ஜே6 முன்பு ரூ. 13,990-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ. 12,490 ஆக குறைக்கப்பட்ட விலையில் விற்பனையாகிறது.

4 ஜி.பி.மெமரி கொண்ட ஜே6 முன்பு ரூ. 15,990-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதனை தற்போது ரூ. 13,990 ஆக விலை குறைக்கப்பட்டு விற்பனையாகிறது.
இந்த அதிரடி விலைக்குறைப்பின் மூலம் சீன ரக மொபைல்களான ஜியோமி மற்றும் ஹானோர் ஆகியவற்றுடன் சாம்சங் ஜே 6 போட்டியிடும் நிலையில் உள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஜே 6-ன் சிறப்பம்சங்கள்

ஆன்ட்ராய்டு 8.0 ஓரியே இயங்குதளம். 5.6 இன்ச் எச்.டி. + சூப்பர் அமோல்டு திரை, மேலும் 250 ஜி.பி. வரை மெமரியை நீட்டிக்கொள்ளலாம்.
கேமராவைப் பொறுத்தவரை 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ். 8 எம்.பி செல்ஃபி கேமராவும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 3,000 எம்.ஏ.ஹெச். பேட்டரியும் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here