சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட் போனின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்த புதிய ஸ்மார்ட்போனில் பாப் அப் கேமரா வசதி இடம்பெறுகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் வெளிப்புற தோற்றத்தைப் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட் போனில் ‘நியூ லைட்டிங் டிஸ்பிளே’ பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சாம்சங் நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட் போன் தான் இந்த பாப் அப் அப்டேட் பெறும் முதல் போனாக இருக்கும் எனத் தெரிய வருகிறது.

அடுத்தபடியாக சாம்சங் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளின் ஒன்றான ‘இன்ஃவினிட்டி டிஸ்பிளே’ சமளவு டிஸ்பிளேவை பெற உதவும். அதை தொடர்ந்து இந்த புதிய வகை அப்டேட், சாம்சங் கேலக்ஸி ஏ90 மற்றும் ஏ10 ஆகிய போன்களில் அறிமுகம் ஆகவுள்ளது.

இந்த பாப் அப் செல்ஃபி கேமரா விவோ நெக்ஸ், விவோ எக்ஸ் 25 மற்றும் ஓப்போ ஆர் 19 ஆகிய போன்களிலும் அறிமுகமாகவுள்ளது.

சாம்சங் நிறுவனம் சார்பில் இந்த ஆண்டு வெளியிடப்படும் 9 கேலக்ஸி ஏ வகை ஸ்மார்ட் போன்களில், சாம்சங் கேலக்ஸி ஏ90 வகை ஸ்மார்ட் போனும் அடங்கும். இந்த ஸ்மார்ட் போன்களில் இன் டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட், ஸ்னாப் ட்ராகன் 710 மற்றும் 6 அல்லது 8 ஜிபி ரேம் உடன் வெளியாகவுள்ளது. 128 ஜிபி மெமரியுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன், 6.41 இஞ்ச் டிஸ்பிளே மற்றும் ஆண்டிராய்டு பைய் அப்டேட் பெறும் வாய்ப்புள்ளது.

பிளாக், கோல்டு மற்றும் சில்வர் ஆகிய நிறங்களில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ90 வெளிவருகிறது. அறிமுக தேதி மற்றும் விலை போன்ற முக்கிய தகவல்கள் இன்னும் வெளி வரவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here