சாம்சங் நிறுவனம் சமீபத்தில் தனது ‘கேலக்ஸி ஏ’ தயாரிப்புகளான கேலக்ஸி ஏ10, கேலக்ஸி ஏ30 மற்றும் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து தற்பொது சாம்சங் கேலக்ஸி ஏ40 உலகமெங்கும் வெளியாகவுள்ளது. தற்போது அதன் விலை பற்றிய தகவல் கசிந்துள்ளது.

அத்துடன் இந்தப் புதிய மாடல் ஸ்மார்ட்போன் அண்ட்ராய்டு பைய் மற்றும் ஓன் யுஐ இயங்குதளம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த புதிய கேலக்ஸி ஏ40, எக்ஸ்னாஸ் 7885 எஸ்.ஓ.சி, ஸ்னாப்டிராகன் 710 ப்ராஸசர்ருடன் வெளிவருகிறது. 4000 mAh பேட்டரி, ஒரு 13 எம்.பி. கேமரா மற்றும் 8 எம்.பி. கேமரா கொண்ட இரு கேமராக்களும் பின்புறம் வழங்கப்பட்டுள்ளன. ஒரு 8 எம்.பி. செல்பி கேமராவும் இருக்கலாம் எதிப்பார்க்கப்படுகிறது.

மேலும் 4ஜிபி அல்லது 64ஜிபி மெமரி மற்றும் 512ஜிபி நீட்டிக்கக் கூடிய சேமிப்பு வசதியை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கலாம் எனவும் தெரிகிறது.கேலக்ஸி A40 முழு விவரங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை, ஆனால் சாம்சங் Exynos SoC சிப்புடன்( ARM-based System-on-Chips) கொண்டு வெளிவரலாம்.

மேலும் கசிந்துள்ள தகவலின்படி, சாம்சங் கேலக்ஸி ஏ40, EUR 249(ரூ.20,000) க்கு ஐரோப்பாவில் விற்பனைக்கு வரவுள்ளது. அதன் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், பிரிட்டன், போலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் வரும் ஜூன் மாதத்திற்குள் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அதேபோல் இந்தியாவில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here