சாம்சங் கேலக்ஸி எஸ்10(Samsung Galaxy S10)ஸ்மார்ட்போன் அறிமுகமாக சில மாதங்கள் இருக்கும் நிலையில், கேலக்ஸி எஸ்10 விவரங்கள் இணையத்தில் வெளிவரத்தொடங்கியுள்ளன.

Samsungcentral.com_galaxys10render1

2019-ம் ஆண்டில் சாம்சங் நிறுவனத்தின் முதல் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக அறிமுகமாக இருக்கும் கேலக்ஸி எஸ்10 மாடலில் ஐரிஸ் ஸ்கேனரை நீக்கி விட்டு, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட சாம்சங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என தெரிய வருகிறது. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தவிர கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் 3D முக அங்கீகார தொழில்நுட்பம் சேர்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

Female face with lines from a facial recognition software

இஸ்ரேலை சேர்ந்த மான்டிஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து 3D முக அங்கீகார தொழில்நுட்பம் சார்ந்த தொழில் நுட்பத்துக்காக சாம்சங் நிறுவனம் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இரு நிறுவனங்களும் இணைந்து ஐபோன் X மாடலில் இருப்பதைப் போன்ற முக அங்கீகார வசதியை உருவாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

maxresdefault
Samsung-Galaxy-S9-AR-Emoji

இந்த திட்டம் வெற்றிபெறும் பட்சத்தில் சாம்சங் தனது எஸ்10 மாடலில் ஐரிஸ் ஸ்கேனரை நீக்கிவிட்டு, 3D முக அங்கீகார தொழில்நுட்பத்தை வழங்கும் என கூறப்படுகிறது. புதிய தொழில்நுட்பங்களை எஸ்10 ஸ்மார்ட்போனில் வழங்கும் பட்சத்தில் சாம்சங் நிச்சயம் ஐரிஸ் ஸ்கேனரை நீக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இத்தோடு புதிய ஸ்மார்ட்போனில் ஏ.ஆர். எமோஜி அம்சமும் இடம்பெறலாம் என்ற எதிர்பார்பும் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here