சாம்சங் நிறுவனம்  தனது கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி(2340×1080 பிக்சல்) பிளஸ் இன்ஃபினிட்டி-ஒ எல்.சி.டி. ஸ்கிரீன், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 6 ஜி.பி ரேம் வழங்கப்பட்டுள்ளது. 

கேலக்ஸி எம்40-ல்,  சாம்சங் ஒன் யு.ஐ. சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 (பை)  இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 32 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் இனைக்கப்பட்டுள்ளது. இத்துடன் 16 எம்.பி. செல்ஃபி கேமராவும் உள்ளது.

ஸ்மார்ட்போனின் பின்புறம் கிரேடியண்ட் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கும் கேலக்ஸி எம்40 மாடலில் கைரேகை சென்சாரும் பின்புறமாகவே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் நீக்கப்பட்டு யு.எஸ்.பி. டைப்-சி இயர்போன்கள் வழங்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் ரூ.19,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது மிட்நைட் புளு மற்றும் சீவாட்டர் புளு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஜூன் 19 ஆம் தேதி முதல் அமேசான் மற்றும் சாம்சங் ஆன்லைன் தளங்களில் ஆரம்பமாகிறது.

அறிமுகச் சலுகையாக வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல், வோடபோன், ஜியோ நிறுவனங்கள் பல சலுகைகளை வழங்குகின்றன.

அந்த வகையில் அறிமுகச் சலுகையாக ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ரூ.249 மற்றும் ரூ.349 சலுகைகளில் பத்து மாதங்களுக்கு 100 சதவிகிதம் கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ரூ.3750 மதிப்புள்ள கேஷ்பேக் கிடைக்கும்.

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.198 சலுகையில் பத்து மாதங்களுக்கு இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here