வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகமாகும் செய்கிறது.

மேலும் சாம்சங் வெளியிட்டுள்ள தகவல்படி, இதற்கு முன்னர் வெளியான எம்10 மற்றும் எம்20, இன்ஃபினிட்டி “வி” வகை திரையைக் கொண்டிருந்தன. தற்போது கேலக்ஸி எம்30 இன்ஃபினிட்டி “யூ” வகைத் திரையுடன் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது. அத்துடன் அதன் திரை அளவையும் வெளியிட்டுள்ளது சாம்சங்.

கேலக்ஸி எம்30, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் சாம்சங் எக்ஸ்பீரியன்ஸ் 9.5 இயங்குதளம், மேலும் 6.3 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் மேன்படுத்தப்பட்ட திரையுடன் வருகிறது. மேலும், பின்புறத்தில் 3 கேமராக்கள் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 5 எம்.பி. அல்ட்ரா-வைடுஆங்கிள் கேமரா, 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 என மூன்று பின்புற கேமராக்களுடன் வருகிறது.

இதில் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என இரண்டு வெரியண்ட்களில் வருகிறது. மேலும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளது. இதில் டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ, 5,000mAh பவர் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி ஆகியவையும் இருக்கின்றன.

கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனின் பல அம்சங்கள் வெளியாகியுள்ள நிலையில் சுமார் ரூ.14,999க்கு இதன் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த புதிய போன், அமேசான் மற்றும் சாம்சங் இணையதளங்களில் விற்பனை செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here