பெங்களூருவில் உள்ள சாம்சங் ஓபரா ஹவுஸில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நடைபெறும் ஒரு வெளியீட்டு விழாவில் புதிய கேலக்ஸி நோட் 10 அறிமுகம் செய்யப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்த மாத ஆரம்பத்தில் நியூயார்க்கில் அறிமுகமானது. புதிய டைனமிக் அமோலேட் டிஸ்ப்ளே, புதிய எஸ் பென், ட்ரிபிள் / க்வாட் கேமரா மற்றும் புதிய எக்ஸினோஸ் 9825 சிப்செட் போன்ற பல சிறப்பங்சங்களுடன் கேலக்ஸி நோட் 10 வெளிவர இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி நோட் 10 மற்றும் நோட் 10 பிளஸ் ஆகிய இரண்டுமே, பன்ச்-ஹோல் கேமரா மற்றும் மிக மெல்லிய பெஸல்களை கொண்ட புதிய டைனமிக் அமோலேட் டிஸ்ப்ளேவுடன் வரவிருக்கிறது. நோட் 10 ஸ்மார்ட்போன்  6.3 அங்குல FHD+ Infinity O டிஸ்ப்ளேவும், நோட் 10 பிளஸ் 6.8அங்குல QHD + டிஸ்ப்ளேவும் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 7nm Exynos 9825 chipset-ல் இயங்கும். மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 1TB வரை மெமரியை நீட்டிக்கும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் போன்களுக்கான SPen,  ப்ளூடூத் எல்இ அம்சத்துடன் புதிய ஏர் ஆக்சன்ஸ்( airactions) அம்சத்தையும் தன்னுள் கொண்டுள்ளது. இது நீங்கள் ஸ்டைலஸை அசைவுகள் மூலம் ஸ்மார்ட்போன் ஸ்க்ரீனில் செயல்களை நிகழ்த்த உதவும். மேலும் ப்ளூடூத் எல்இ வசதி மூலம் தூரத்திலிருந்து  புகைப்படங்களை எடுக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

நோட் 10 ஸ்மார்ட்போனில், 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட3,500 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது.  நோட் 10பிளஸ், 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 4,300 எம்ஏஎச் பேட்டரியையும் கொண்டுள்ளது. 

இந்த ஸ்மார்ட்போன்களின் மிகச்சிறந்த அம்சங்களாக அதன் கேமராக்கள் விளங்குகின்றன். நோட் 10 ஸ்மார்ட்போனின் பின் பக்கத்தில் மூன்று கேமரா வழங்கப்பட்டுள்ளது. அதில்Variable aperture (f/1.5-2.4) உடனான 12MP முதன்மை கேமரா, 16MP Ultra wide-angle கேமரா மற்றும்12MP Telephoto லென்ஸ் ஆகியவை அடங்கும். அதேபோல்  நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போனிலும்அதே மூன்று கேமராகளுடன் நான்காவதாக ஒரு ToF sensor இணைக்கப்பட்டுள்ளது. மேலும் முன்பக்கத்தில், இரண்டு ஸ்மார்ட்போன்களுமே10MP அளவிலான செல்பீ கேமராவையும் கொண்டுள்ளது.

பாதுகாப்பிற்கான Ultrasonic in-display கைரேகை சென்சாருடன் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே Android Pie அடிப்படையிலான One UI கொண்டு இயங்குகிறது. 

கேலக்ஸி நோட் 10 இந்திய விலை விபரம்:

சாம்சங் அதன் புதிய ஸ்மார்ட்போன்களின் இந்திய விலைமற்றும் விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி, 256 ஜி.பி மாடல் ரூ.69,999/-க்கு விற்பனையாகும். இது ஆரா க்ளோ, ஆரா ரெட் மற்றும் ஆரா பிளாக் ஆகிய மூன்று நிறங்களில்கிடைக்கும். 

கேலக்ஸி நோட் 10 பிளஸ் இந்திய விலை விபரம்:

சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போனின் 12GB + 256GB மாடல் ஆனது ரூ.79,999/-க்கு விற்கப்படும். இதன் 12 ஜி.பி, 512 ஜி.பி, மாடல் விலைபற்றிய தகவல் வெளிவரவில்லை. சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸூம் ஆரா க்ளோ, ஆரா ரெட் மற்றும் ஆரா பிளாக் ஆகிய ஆகிய மூன்று நிறங்களில்கிடைக்கும். 

புதிய கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன்கள், சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் சாம்சங்.காம் மற்றும் ப்ளிப்கார்ட், அமேசான், பேடிஎம் மற்றும் டாடா சிஎல்யூக் ஆகியதளங்கள் மூலம் ஆன்லைனில் முன்பதிவு (ஆகஸ்ட் 22 வரை) செய்யலாம். ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை முதல் விற்பனை தொடங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.