428
ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் சாமி படத்தின் இரண்டாம் பாகமான சாமி ஸ்கொயரின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியீட்டு தேதியை அறிவித்திருக்கிறார்கள்.

ஹரி, விக்ரம் இருவரது கரியரிலும் அல்டிமேட் ஹிட் என்றால் அது சாமி படம்தான். பட்டிதொட்டியெங்கும் படம் பட்டையை கிளப்பியது. சாமியின் வெற்றியில் மாமியாக நடித்த த்ரிஷாவின் பங்கும், இசையமைப்பாளர் ஹாரிஸின் பங்களிப்பும் உண்டு. சாமி ஸ்கொயர் படத்தில் த்ரிஷாவுடன் கீர்த்தி சுரேஷையும் ஒப்பந்தம் செய்தனர். கதையில் கீர்த்தி சுரேஷுக்கு தன்னைவிட முக்கியத்துவம் அதிகம் என்பதால் த்ரிஷா படத்திலிருந்து வெளியேறினார். முதல்பாகத்துக்கு இசையமைத்த ஹாரிஸுக்குப் பதில் தேவி ஸ்ரீபிரசாத்தை ஒப்பந்தம் செய்தனர். பாபி சிம்ஹா வில்லன்.

இதன் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை மே 17 மாலை ஆறு மணிக்கு வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். ஆகஸ்டில் படம் திரைக்கு வருகிறது.

இதையும் படியுங்கள்: சுரங்க முறைகேடு வழக்கில் ஜனார்த்தன ரெட்டிக்கு சாதகமாக தீர்ப்பு வர நீதிபதிக்கு 100 கோடி லஞ்சம் ; காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ

இதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்