கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அஜித் சிங், வாழும் கலை அமைப்பினர் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு கார் ஓட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செப்.5ஆம் தேதி, வடகிழக்கு சுதேசி மக்கள் மாநாடு கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக வாழும் கலை அமைப்பினர் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், கவுகாத்தி விமானநிலையம் வந்தடைந்தார். அவரை கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அஜித் சிங் வரவேற்றது மட்டுமில்லாமல், விமானநிலையத்திலிருந்து ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு அவரே காரையும் ஓட்டிச் சென்றார்.

ajith

நீதிபதி அஜித் சிங்கின் இச்செயல் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கவுகாத்தி உயர்நீதிமன்ற பார் கவுன்சில் புகார் அளிக்கவுள்ளது.

இதையும் படியுங்கள்: அப்பா சம்பாதித்த பணத்தில் ஜாலியாக இருப்பவரா நீங்கள்? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்