இது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது ; செக்காரக்குடியில் இறந்த 4 பேரின் குடும்பத்தினருக்கும் முதல்வரின் உத்தரவுபடி உடனடியாக தலா 10 லட்சம் ரூபாய் வீதம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.

செக்காரக்குடி வீட்டின் உரிமையாளர் சோமசுந்தரம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளத்தில் எஸ்.ஐ ரகு கணேஷால் தாக்கப்பட்டு இறந்த மகேந்திரன் இறப்பு குறித்து விசாரணையில் உள்ளது. தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூரில் ஆட்டோ டிரைவர் குமரேசன் இறப்பு சம்பவம் குறித்தும் வழக்கு பதிவு செய்து விசாரணையில் உள்ளது.

சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் பெரும்பான்மை சமூகத்தினருக்கு அரசு உடனடியாக நிதி வழங்குகிறது. இந்துக்களாக இருந்தாலும் சிறுபான்மையினரான குமரேசன், மகேந்திரன் குடும்பத்திற்கு உதவி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உண்மை அல்ல.

அரசு எந்த பாரபட்சமும் பார்க்கவில்லை. சாத்தான்குளம் சம்பவத்தில் அரசியல் தலையீடு இல்லை என சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உடன் என்னை தொடர்புபடுத்தி வெளி ஒரு தகவல்கள் உண்மை இல்லை.

முற்றிலும் தவறானது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கேரளாவை சேர்ந்த வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர். எனவே இத்தகைய பரபரப்பில் உறுப்பினர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here