சாதிக் கொடுமையால் மும்பையில் மருத்துவ மாணவி தற்கொலை ; 3 மருத்துவர்கள் கைது

0
182


ஆதிவாசி பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையோடு வலம் வர வேண்டியவர் மருத்துவர் பாயல் தட்வி. ஆனால் அவர் சாதிக்கொடுமையால்  தனதுயிரை மாய்த்துக்கொண்டார் 

பாயல் தட்வி. இவருக்கு மருத்துவராகி சமூக சேவை செய்ய வேண்டும் என்பதே விருப்பம். மகாராஷ்டிர மாநிலத்தின் ஜல்கோன் என்ற பகுதியை சேர்ந்த இவர், மருத்துவ படிப்பு முடிந்த பிறகு பழங்குடியினருக்காக மருத்துவ சேவையாற்ற வேண்டும் என்று கனவு கண்டார்.

மும்பையில் உள்ள டோபிவாலா மருத்துவக் கல்லூரியில் பெண்கள் நல மருத்துவம் படித்து வந்தார். ஆனால், அந்தக் கனவுகள் எல்லாம் நிறைவேறாமலேயே போனது. கடந்த 22ஆம் தேதி தூக்கு மாட்டிக் கொண்ட பாயல், தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

அவர் பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால்,பாயல் தட்வியின் சாதியை சொல்லிச் சொல்லி ராகிங் செய்வதும், துன்புறுத்துவதுமாக இருந்து, அவரது தற்கொலைக்குக் காரணமாக இருந்த கல்லூரியின் மூத்த மாணவிகள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே நேற்று (திங்கள்கிழமை) பக்தி மெஹர் கைதான நிலையில், இன்று (புதன்கிழமை) ஹேமா அஹுஜா, அங்கிதா கந்தேல்வால் ஆகியோர் கைதாகியுள்ளனர்.

பாயல் தட்வியை சாதியக் கொடுமை செய்வதாக ஏற்கனவே கல்லூரி நிர்வாகத்திடம் பெற்றோர் புகார் அளித்தும், அதன் மீது நடவடிக்கை எடுக்காததே, தங்களது மகள் உயிரிழப்புக்குக் காரணமாகிவிட்டதாகக் கூறி கதறும் பெற்றோர், எங்கள் குடும்பத்தில் மட்டுமல்ல, எங்கள் சமுதாயத்திலேயே அவள்தான் முதல் மருத்துவர் என்று பாயல் தட்வியின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். 

மும்பை டோபிவாலா மருத்துவக் கல்லூரி பாயல் தட்வி ராகிங்ங்கால் மிகுந்த கொடுமைக்கு ஆளாகியுள்ளார் என்று கூறியிருக்கிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here