சாதனை… ரஷ்யாவில் வெளியாகும் முதல் இந்திப் படம் பேடு மேன்

0
144
Akshay Kumar

இந்தியாவில் வெளியாகும் அதேநாளில் அக்ஷய் குமாரின் பேடு மேன் திரைப்படம் ரஷ்யாவிலும் வெளியாகிறது. இதுவரை எந்த இந்தியப் படமும் இப்படி வெளியானதில்லை என அக்ஷய் குமார் கூறியுள்ளார்.

கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் மலிவுவிலை நாப்கின்கள் தயாரிக்கும் மிஷினை கண்டுபிடித்தவர். பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண தனது வாழ்நாளை செலவிட்டவர். அவரது மிஷின் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. சாதனை மனிதரான அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து நடிகர் அக்ஷய் குமாரின் மனைவி டுவிங்கிள் கன்னா ஒரு சிறுகதை எழுதியுள்ளார். அவரது தூண்டுதலில் அக்ஷய் குமார் பேடு மேன் படத்தில் நடிக்க, டுவிங்கிள் கன்னாவே படத்தை தயாரித்துள்ளார். பால்கி இயக்கம்.

இந்தப் படம் நாளை திரைக்கு வருகிறது. நாளை ரஷ்யாவிலும் இப்படம் வெளியாவது சாதனை என்று அக்ஷய் குமார் ட்வீட் செய்துள்ளார். ஆம், சாதனைதான்.

ஒரு சாதனை தமிழரின் கதை படமாவது சிறப்பு என்ற போதிலும் படத்தில் பேடு மேன் ஒரு இந்திக்காரராக வடஇந்திய மாநிலத்தைச் சேர்ந்தவராக காட்டப்பட்டுள்ளார். ஒரு தமிழர் அருணாச்சலம் முருகானந்தம் கதையை படமாக்கியிருந்தால் இப்படி நேர்ந்திருக்காது.

படம் மாபெரும் வெற்றிபெற டுவிங்கிள், அக்ஷய் மற்றும் பால்கிக்கு வாழ்த்துகள்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்