விஜய்யின் ‘பிகில்’ படத்தில் இடம் பெறும் ‘வெறித்தனம்’ பாடல் யூடியூப்பில் புதிய வரலாறு படைத்திருக்கிறது.

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் பிகில். ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில், விஜய் பயிற்சியாளராக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

படத்தில், கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெரிப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் தீபாவளிக்கு வெளியாகும் என தெரிவிக்கபட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான `சிங்கப்பெண்ணே’ பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. 

விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடல் செப்டம்பர் 1-ந் தேதி வெளியானது. பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்தபாடல் வெளியான சில நிமிடங்களிலே டிரண்டானது. இப்பாடல் ஒரு நாளில் அதிகம் லைக் செய்யப்பட்ட லிரிக்கில் வீடியோ என்ற சாதனையை படைத்துள்ளது. மேலும் வெளியான 24 மணிநேரத்தில் உலகளவில் யூடியூப்பில் அதிகம் பார்க்கபட்ட வீடியோக்கள் பட்டியலில் வெறித்தனம் பாடல் 45 லட்சம் பார்வையாளர்களை கடந்து 4-வது இடத்தை பிடித்தது. 

இப்படி அடுக்கடுக்கான சாதனைகளை படைத்து வரும் வெறித்தனம் பாடல், தற்போது மேலும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. வெறித்தனம் பாடல் இதுவரை 1.2 கோடி பேர் பார்த்துள்ள இப்பாடல் 10 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது. இதன்மூலம் அதிவேகமாக 10 லட்சம் லைக்குகளை பெற்ற லிரிக்கில் வீடியோ என்ற சாதனையை படைத்துள்ளது.    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here