சவூதி அரேபியாவுக்கு உளவு பார்த்ததாக டிவிட்டர் நிறுவன முன்னாள் ஊழியர்கள் 2 பேர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரபல சமூகவலைதள நிறுவனமான டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் அலி அல்ஜாபாரா, அகமது அபுவாமோ மீதும், சவூதி அரேபியா அரச குடும்ப முன்னாள் ஊழியரான அகமது அல்முதைரி ((Ahmed Almutairi)) மீதும் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் இக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில் துருக்கியில் உள்ள சவூதி அரேபியா தூதரகத்தில் முன்பு கொலை செய்யப்பட்ட எழுத்தாளர் கசோக்கி உள்ளிட்டோரின் டிவிட்டர் பக்கங்களை கண்காணித்து, அதிலிருக்கும் தனிப்பட்ட தகவல்களை பணத்துக்கு சவூதி அரேபியா அதிகாரிகளிடம் அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here