சளி, இருமலுக்கு இதமான மிளகு சீரக ரொட்டி

Milagu Jeeraga rotti

0
764

சளி, இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கான ரொட்டி.  இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 2 கப்
மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மிளகுத்தூள், சீரகத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து நன்கு மிருதுவாகப் பிசைந்து 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

உருண்டைகளை இரு கைகளின் நடுவில் வைத்துச் சிறிது அழுத்தம் கொடுத்து வட்டமாகச் செய்து கொள்ளவும்.

பிறகு சிறிதளவு மாவில் புரட்டி வட்டமாகத் தேய்த்துக்கொள்ளவும்.

சூடான தோசைக்கல்லில் ரொட்டிகளைப் போட்டு இரண்டு பக்கங்களிலும் நன்கு உப்பிக்கொண்டு வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.

ருசியான மிளகு சீரக ரொட்டி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here