சித்தூர் எம்எஸ்ஆர் சர்க்கிள் அருகே உழவர் சந்தை உள்ளது.  இங்கு ஒரு நபருக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.25 க்கு நேற்று(சனிக்கிழமை) வழங்கப்பட்டது.  இந்நிலையில், கூட்டநெரிசல் அதிகமானதால் போலீசார் காலை 4 மணி முதல் காலை 11 மணி வரை பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

உழவர் சந்தையில் போதிய இடவசதி இல்லாததால் கூட்ட நெரிசல் அதிகமானது. மேலும், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதன் காரணமாகவும், வெங்காய விற்பனை சித்தூர் மாங்காய் மார்க்கெட் பகுதிக்கு மாற்றப்பட்டது.

அங்கு 5 கவுண்டர்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் பொதுமக்களுக்குவெங்காயம் விற்பனை செய்யப்பட்டது.

கடந்த 2 வாரங்களாக வெங்காயம் விற்பனை செய்யாத நிலையில்  நேற்று முன்தினம் மீண்டும்  வெங்காயம் விற்பனை செய்வதாக  உழவர் சந்தை அதிகாரி தெரிவித்தார்.

இதனால் நேற்று பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வெங்காயத்தை வாங்குவதற்காக அலை மோதினர். பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்றதால் மாங்காய் மார்க்கெட்டில் இருந்து, கட்ட மஞ்சு பகுதியில் உள்ள சாய்பாபா கோயில் வரை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து வெங்காயத்தை வாங்கிச்சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here