சலுகை கட்டணங்களை உயர்த்த வி நிறுவனம் திட்டம்

Vodafone Idea may raise tariffs by 15-20% end of 2020 or early 2021

0
76

வி(வோடபோன் ஐடியா) நிறுவனம் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ தனது சலுகை கட்டணங்களை 15 முதல் 20 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வியாபாரத்தில் தொடர் இழப்பை சரி செய்யும் முயற்சியாக விலை உயர்வை அமல்படுத்த வி நிறுவனம் திட்டமிட்டு இருக்கலாம் என தெரிகிறது.

மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அடிப்படை கட்டணத்தை நிர்ணயிக்கும் முன் வி நிறுவனம் விலை உயர்வு பற்றிமுடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த விலை உயர்வு டிசம்பர் மாதவாக்கில் அமலுக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது. விலை உயர்வு அதிகபட்சம் 25 சதவீதம் வரை இருக்கலாம் என அந்நிறுவன வட்டாரங்கள் கூறினாலும், இவ்வாறு அமல்படுத்துவது சற்றே சிக்கலான காரியம் என்றும் கூறப்படுகிறது.

பாரதி ஏர்டெல் நிறுவனமும் இதேபோன்று சலுகை விலையை உயர்த்தலாம் என தகவல் வெளியாகி உள்ளது. எனினும்,  ஜியோ சலுகை கட்டணங்களுக்கு போட்டியை ஏற்படுத்தத் இரு நிறுவனங்களும் தொடர்ந்து முயற்சிக்கலாம் என கூறப்படுகிறது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here