சர்வதேச விமான சேவை எப்போது? : விமான போக்குவரத்து துறை மந்திரி பதில்

Aviation minister Hardeep Singh Puri said that there is no need to quarantine one if Aarogya Setu clears the passenger. "Don't understand the need for quarantine of passenger who has green status on Aarogya Setu app," Mr Puri said. Hardeep Singh Puri also said that India will try to restart international passenger flights before August.

0
692

இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் விமான சேவை நிறுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மே 25 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்க உள்ளது.

இதற்காக 7 வகையான கட்டணங்களை நிர்ணயம் செய்து மத்திய அரசு அறிவித்து உள்ளது. விமானங்களை இயக்குவதற்கான ஏற்பாடுகளை விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் தீவிரமாக மேற்கொண்டுள்ளன. விமான டிக்கெட்டுகள் முன்பதிவும் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஃபேஸ்புக் நேரலை மூலம் பேசிவருகிறார்.

அப்போது அவர்,’’ உள்நாட்டு விமான சேவையில் கூடுதல் விமானங்களை இயக்க முயற்சித்து வருகிறோம். ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பு குறிப்பிட்ட அளவில் சர்வதேச விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளோம்’’ என கூறியுள்ளார்.

மேலும், உள்நாட்டு விமான சேவையை தொடங்கியதற்கும், ஊரடங்கு மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதற்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here