யோகாவிற்கு மதம், மொழி, நாடு என எந்த பேதமும் இல்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். யோகா தினத்தை சர்வதேச தினமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. சபைக்கு வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட ஐ.நா.சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று (ஜூன் 21) 6-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் இருந்தபடி பிரதமர் மோடிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும்  பொதுமக்களுக்கு விளக்கினார். பிரதமர் பேசியதாவது; ஒற்றுமையை பறைசாற்றும் நாளாக சர்வதேச யோகா தினம் உள்ளது. இந்த ஆண்டு வீட்டில் இருந்து குடும்ப உறுப்பினரோடு அனைவரும் யோகா செய்யுங்கள் என்று நாட்டு மக்களுக்கு  அறிவுறுத்தினார்.

உங்கள் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக யோகாவை பழகுங்கள். யோகாவிற்கு மதம், மொழி, நாடு என எந்த பேதமும் இல்லை. கொரோனாவை ஒழிக்க யோகா ஒரு சிறந்த வழிமுறையாக திகழ்கிறது. யோகா செய்தால் உடலில் நோய்  எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மன உறுதி மற்றும் நேர்மறை எண்ணங்களுக்கு வழிவகுக்கிறது. உடல் வலிமை மட்டுமின்றி மனதை சமநிலைப்படுத்தவும் யோகா உதவும். வைரசுடன் போராட யோகா உதவும். யோகாவின் பலனை உலகம்  தற்போது உணர்ந்துள்ளது. யோகா ஒரு ஆரோக்கியமான கிரகத்திற்கான நமது தேடலை மேம்படுத்துகிறது. இது ஒற்றுமைக்கான சக்தியாக உருவெடுத்து மனிதகுலத்தின் பிணைப்பை ஆழப்படுத்துகிறது. இது பாகுபாடு காட்டாது, அது இனம்,  நிறம், பாலினம், நம்பிக்கை மற்றும் வம்சாவளியைத் தாண்டியது.

இதற்கிடையே, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாநில ஆளுநர்கள், மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், ராணுவ வீரர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் தங்களது இடத்தில் யோகா செய்து பயிற்சி  பெற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here