சர்வதேசச் சந்தையில் அறிமுகமானது நோக்கியா 5.3 மற்றும் நோக்கியா 5310

The Nokia 5.3 is a dual-SIM supported phone and runs Android 10 out of the box. The smartphone packs a 6.55-inch HD+ Dual-gate’ display with a 2.5D glass on top and a waterdrop notch.

0
246

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம், நோக்கியா 8.3 5ஜி, நோக்கியா 5.3, நோக்கியா 1.3 மற்றும் நோக்கியா 5310 கிளாசிக் ஆகிய ஸ்மார்ட்போன்களை சர்வதேசச் சந்தையில் அறிமுகம் செய்தது. எனினும், இந்தியாவில் நோக்கியா 5.3 மற்றும் நோக்கியா 5310 இரு மாடல்களை மட்டும் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிகிறது.

நோக்கியா 5.3 5ஜி மற்றும் நோக்கியா 1.3 உள்ளிட்டவை எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 3 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி என மூன்று வித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 2 எம்.பி. மேக்ரோ சென்சார் வழங்கப்படுகிறது. இத்துடன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, பின்புறம் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இந்திய சந்தையில் நோக்கியா 5.3 இதன் விலை ரூ. 15,000 பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here