பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைகிற்கு மிக அதிகமாக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அரசியலாக்கப்படுகிறது என ஓய்வுபெற்ற ராணுவ தளபதி டி.எஸ் ஹூடா தெரிவித்துள்ளார்.

2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உரி பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடிக்கும் கொடுக்கும் விதமாக அடுத்த சில நாட்களில் இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது. அப்போது வடக்குபகுதி ராணுவ தளபதியாக இருந்தவர் ஹூடா. சர்ஜிக்கல் ஸ்டிரைக் வெற்றிகரமாக நடக்க பணியாற்றிய முக்கிய தளபதிகளில் இவரும் ஒருவர்.

சண்டிகரில் நடந்த விழாவில் பங்கேற்று பேசிய முன்னாள் ராணுவ தளபதி டி.எஸ் ஹூடா

எல்லை தாண்டிய ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் புகுந்து இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் துல்லிய தாக்குதல் மிக முக்கியமான நிகழ்வு தான். இது தேவையான தாக்குதல். அதனாலேயே இதனை நடத்தினோம். அதுகுறித்து சந்தேகங்கள் எழுவது இயற்கை தான்.

ஆனால் தொடர்ந்து அதுபற்றி அதிகப்படியாக பேசுவது தேவையற்ற எண்ணங்களை ஏற்படுத்தும். சர்ஜிக்கல் ஸ்டிரைக் ரகசியமாக வைக்கப்பட்டதாலேயே நினைத்ததை விட சிறப்பாக செயலாற்றியது.

சர்ஜிக்கல் ஸ்டிரைக் மிக அதிகப்படியாக அரசியல் ஆக்கப்பட்டுவிட்டதாக நான் எண்ணுகிறேன். இதுபற்றி பேசும் முன் நாட்டின் நலனை அரசியல்வாதிகள் எண்ணி பார்க்க வேண்டும். ராணுவ செயல்பாடுகள் குறித்தும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here