சர்ச்சையில் சிக்கிய சித்தராமையா

0
232

கர்நாடக காங். தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா அவரது உதவியாளருக்கு கன்னத்தில் அறையும்  வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் நடந்து வந்த காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி, கடந்த மாதம் கவிழ்ந்ததை அடுத்து புதிய முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றார். இந்நிலையில் கூட்டணி ஆட்சிக் கவிழ்ந்ததற்கு யார் காரணம் என்பது தொடர்பாக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் தலைவர்கள் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “சித்தராமையாவுக்கு நான் முதல்மைச்சரானதை சகித்துக்கொள்ள முடியவில்லை. தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை, அரசுக்கு எதிராகச் செயல்படும்படி தூண்டியவர் அவர்தான்” எனத் தெரிவித்திருந்தார். 

அதற்குப் பதிலளித்த சித்தராமையா, குமாரசாமி, என்னை நண்பராகவோ, நம்பிக்கைக்குரியவராகவோ ஒரு போதும் பார்க்கவில்லை. அவர் என்னை எதிரியாகவே பாவித்தார். இதுதான் அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணம் எனத் தெரிவித்தார். 

இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா அவரது உதவியாளருக்கு கன்னத்தில் அறையும்  வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மைசூர் விமானநிலையத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்துவிட்டு திரும்பும்போது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.