சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் பாகற்காயை சேர்த்து கொள்வது நோயை கட்டுப்படுத்தும்.
சர்க்கரை நோயாளிக்களுக்கு பலன் தரும் பாகற்காய் சூப்.

தேவையான பொருட்கள் :

பெரிய பாகற்காய் – 1
எலுமிச்சம்பழம் – பாதி
எண்ணெய் – 1 தேக்க‌ர‌ண்டி
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 1
மிளகு தூள் – 1 ஸ்பூன்

தாளிக்க :

சோம்பு – கால் தேக்க‌ர‌ண்டி
உளுத்தம்பருப்பு – அரை தேக்க‌ர‌ண்டி
பட்டை – 1
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொண்டு, பாகற்காயை பொடியாக நறுக்கி சிறிது மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு வேக விட வேண்டும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சோம்பு, உளுத்தம் பருப்பு, பட்டை, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.

தக்காளி நன்றாக வெந்ததும் வெந்த பாகற்காய் போட்டு கிளறி தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்கி பின் அதில் உப்பு, மிளகு தூள் சேர்த்து, எலுமிச்சம்பழம் சேர்க்க வேண்டும்.

கடைசியாக கொத்துமல்லி தூவி பரிமாறிக் கொள்ளுங்கள்.

Tom_jued_tahoo

இப்போது பாகற்காய் சூப் தயார். சுவைத்துப் பாருங்கள்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்