விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் சர்கார் படத்தின் தமிழக விநியோக உரிமை விற்கப்பட்டுள்ளது. மினிமம் கியாரண்டி அடிப்படையில் ஏரியாக்களின் விற்பனை நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

சர்காரின் சென்னை சிட்டி உரிமையை அபிராமி ராமநாதன் வாங்கியுள்ளார். விஜய்யின் கடைசிப்படம் மெர்சல் சென்னை சிட்டியில் 10 கோடிகளை தாண்டி வசூலித்து பாகுபலி 2 படத்துக்கு அடுத்த இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்காரின் மதுரை ஏரியாவை விநியோகஸ்தர் பிரவீண் வாங்கியுள்ளார். சேலம் உரிமையை அழகரின் சுஷ்மா சினி ஆர்ட்ஸ் வாங்கியுள்ளது. திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஏரியா உரிமையை பிரான்சிஸ் அடைக்கலராஜின் எல்ஏ சினிமாஸ் பெரும் தொகைக்கு கைப்பற்றியிருக்கிறது. மொத்த ஏரியாக்களில் குறைவான விலைக்கு போனது திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஏரியா. இங்கு திரையரங்குகளின் எண்ணிக்கை மற்ற ஏரியாக்களைவிட குறைவு. சீயோன் பிலிம்ஸ் இங்கு சர்காரை விநியோகம் செய்யவிருக்கிறது.

என்ஏசி எனப்படும் வட ஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஏரியாக்களை வாங்கியவர்களின் விவரம் இன்று தெரிய வரலாம்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்