சர்கார் படத்தின் டீஸர் வெளியானதிலிருந்து ஒரு சர்ச்சை ஆக்ஷன் ப்ரியர்கள் மத்தியில் ஓடிக் கொண்டிருக்கிறது.

சர்கார் டீஸரில் வரும் இறுதி சண்டைக் காட்சியில், அடியாள் ஒருவரை அடித்து தோளில் தூக்கியபடி நிற்பார் விஜய். இதேபோன்ற சண்டைக் காட்சி அல்லு அர்ஜுன் நடித்த துவ்வாட ஜெகன்னாதம் படத்தில் இடம்பெற்றிருக்கும். அதில் அல்லு அர்ஜுன் எப்படி எதிரியை அடித்து தோளில் தொங்கப் போட்டிருப்பாரோ, அதேபோல் சர்கார் டீஸரில் விஜய் செய்திருக்கிறார். எனில், சர்கார் சண்டைக் காட்சி தெலுங்குப் படத்தின் காப்பியா என்பது கேள்வி.

சண்டைக் காட்சியில் ஹீரோ அடித்தால் எல்லோரும் தரையிலோ இல்லை கம்பத்திலோதான் போய் விழுவார்கள். அதற்காக இதுவும் அதுவும் ஒன்றாகிவிடாது. அதேபோல் அடித்துத் தூக்கி தோளில் போடுவதும்.

விஜய்யின் தெறி படத்தில் வரும் சண்டைக் காட்சியில் அடியாள்களிடம், இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்க அஞ்சு பேரையும் (ஐந்து என்பது உத்தேசக்கணக்கு) அடிச்சு துரத்தப் போறேன் என்பார். அவர்கள் ஐந்துக்கு மேல் இருப்பார்கள். உனக்கு கணக்குத் தெரியாதா? நாங்க அதைவிட அதிகம் பேர் இருக்கோம் என்பார் அடியாள். உடனே விஜய், நான் இவனை அடிச்சதும், அவன் ஓடிருவான், இவனை உதைச்சதும் அவன் ஓடிருவான். அப்போ மொத்தம் எவ்வளவு பேர் இருப்பாங்க என்பார். அதேபோல் அவர் அடிச்சதும் சிலர் ஓடிப்போவார்கள். அவர் சொன்ன கணக்கில்தான் அடியாள்கள் இருப்பார்கள்.

இந்தக் காட்சியை அப்படியே, டாம் க்ரூஸின் ஜாக் ரீச்சர் படத்தின் முதல் சண்டைக் காட்சியிலிருந்து எடுத்திருப்பார்கள்.

கதையே காப்பி அடிக்கப்படும்போது சண்டைக் காட்சி காப்பி அடிப்பதற்கு பஞ்சாயத்தா? போங்க பாஸ்… போ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here