விஜய்யின் 62 வது படம் சர்காரின் டப்பிங் சென்னையில் தொடங்கியுள்ளது.

முருகதாஸ் இயக்கும் சர்கார் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கிறது. ரஹ்மான் இசை.

இந்தப் படத்தின் ஒரு பாடல் காட்சி மற்றும் சில வசனக்காட்சிகள் அடுத்த மாத தொடக்கத்தில் யுஎஸ்ஸில் படமாக்கப்பட உள்ளது. இந்நிலையில் படத்தின் டப்பிங்னை தொடங்கி உள்ளனர். படப்பிடிப்பு முடியும் முன்பே போஸ்ட்புரொடக்ஷனை தொடங்கினால் மட்டுமே படத்தை விரைவாக முடித்து தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர முடியும். அதற்காகவே டப்பிங்கை தொடங்கியிருக்கிறார்கள்.

சர்காரை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் படத்தை தயாரிக்கிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்