சர்கார் படம் வெளியாகும் நவம்பர் 6 அதிகாலை சிறப்புக் காட்சிகள் நடத்த தமிழக அரசு இதுவரை அனுமதி அளிக்கவில்லை.

ரஜினி, கமல் படங்கள் முன்பு வெளியாகும் போது அதிகாலை 4 மணிக்கே ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சிகள் திரையிடப்படும். இந்தப் போட்டி படிப்படியாக பின்னோக்கி நகர்ந்து, நள்ளிரவு 1 மணிக்கே காட்சிகளை திரையிடும் நிலைக்கு வந்தது. இப்போது அனைத்தும் மாறிவிட்டன. அதிகாலை 4 அல்லது 5 மணிக்கே சிறப்புக் காட்சி போடப்படும்.

சட்டப்படி ஒரு திரையரங்கில் வேலை நாள்களில் 3 காட்சிகளும், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் 4 காட்சிகளும் மட்டுமே திரையிட வேண்டும். ஆனால், புதுப்படங்கள் வெளியாகும் போது இந்த விதி பின்பற்றப்படுவதில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது.

இன்னொருபுறம், கடைசி நேர ரிலீஸ் பிரச்சனைகளால் அறிவிக்கப்பட்ட அதிகாலை சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்படுவதும் அடிக்கடி நடைபெறுகிறது. இதனால், சர்கார் அதிகாலை சிறப்புக் காட்சி தமிழகத்தில் அனுமதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிட மட்டுமே அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், சில திரையரங்குகள் மட்டும் அதிகாலை 5 மணிக்கே சர்காரை திரையிட திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. பிற திரையரங்குகள் ஏழு மற்றும் எட்டு மணிக்கே முதல் காட்சியை திரையிடுகின்றன.

அதேநேரம், இலங்கை வவுனியாவில் உள்ள திரையரங்கில் முதல்நாள் 6 காட்சிகளும், கேரளா திரிச்சூர் கார்த்திகா திரையரங்கில் முதல்நாள் எட்டுக் காட்சிகளும் திரையிடப்பட உள்ளன.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்