பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில்  லீக் சுற்று முடிவிலேயே வெளியேறியது. இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மேலாளர் வாசிம் கான்  தலைமையில்  அணியின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவை நீக்கிவிட்டு, கேப்டனாக பாபர் அசாமை நியமிக்கலாம் என்று கூறப்பட்டது. மேலும் சர்ஃபராஸ் அகமதுவும் மாற்றப்படுவார் என்று கூறப்பட்டது. 

ஆனால், சமீபத்தில் இலங்கை அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அந்த தொடருக்கான கேப்டனாக சர்ஃபராஸையே நியமித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. துணை கேப்டனாக பாபர் ஆசம் நிய மிக்கப்பட்டார்.

இந்நிலையில், டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் அகமது திடீரென்று நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, அசார் அலி டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி20 கேப்டனாக பாபர் ஆசம் நியமிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here