இந்திய பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை (இன்று) சிறிது ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 30.17 புள்ளிகள் உயர்ந்து 33,626.97 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 6.45 புள்ளிகள் உயர்ந்து 10,331.60 புள்ளிகளுடன் நிறைவுபெற்றது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.99ஆக உள்ளது.

bharti airtel

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் 2.53 சதவிகிதம் சரிந்து காணப்படுகிறது. முந்தைய நாளான வியாழக்கிழமையன்று பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பங்கொன்றின் விலை 393.90 ரூபாயாக இருந்தது. தற்போது அதன் விலையில் 9.95 ரூபாய் சரிந்து 383.95 ரூபாயாக உள்ளது.

* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் அதிகபட்ச விலை : ரூ.564.80
* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் குறைந்தபட்ச விலை : ரூ.332.75

அதேபோன்று இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் 1.74 சதவிகிதம் சரிந்து காணப்பட்டது.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்