தொடர் சரிவில் பங்குச் சந்தைகள்

0
481

தேசிய பங்குச் சந்தை

இந்த வார துவக்கத்தில் சரிவைச் சந்தித்த தேசிய பங்குச் சந்தை மூன்றாவது நாள் மட்டும் உயர்ந்து காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து வந்த இரு தினங்களும் சந்தை இறக்கத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. கடந்த புதன்கிழமையன்று மட்டும் முந்தைய நாளை விட நிஃப்டி 29 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. இந்த வாரத்தில் மட்டும் நிஃப்டி 218 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.

nseindia

மும்பை பங்குச் சந்தை
தொடர்ந்து முதல் இரண்டு நாட்கள் சரிவைச் சந்தித்த மும்பை பங்குச் சந்தை கடந்த புதன்கிழமை மட்டும் சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து வந்த இரு தினங்களும் சந்தை இறக்கத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்த வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.

bse

உயர்வைச் சந்தித்த பங்குகள்
லூபின் லிமிடெட் : 6.81 %
சன் ஃபார்மா : 6.69%
ஏசிசி : 3.07 %
அம்புஜா சிமெண்ட்ஸ் : 2.23%
பாரத் பெட்ரோலியம் : 0.50%

சரிவைச் சந்தித்த பங்குகள்
கெயிர்ன் இந்தியா : 8.11%
கோல் இந்தியா : 7.53%
கெயில் இந்தியா : 6.23%
ஓஎன் ஜிசி : 5.12%
பார்தி ஏர்டெல் : 3.96%

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்