நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பங்குகள் 8 சதவீத சரிவுடன் சந்தையை சந்தித்தது.

பொதுப் பங்கு வெளியீட்டில் களமிறங்கிய எல்ஐசியின் பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் முதன்முதலாக செவ்வாய்க்கிழமை பட்டியலிடப்பட்டன. வெளியீட்டு விலையான ரூ.949 காட்டிலும் ரூ.77 குறைவாக ரூ.872 என்ற விலையில் மும்பை பங்குச் சந்தையில் எல்ஐசியின் பங்குகள் பட்டியலாகின.

அதேபோன்று, தேசிய பங்குச் சந்தையிலும் வெளியீட்டு விலையைவிட ரூ.81.80 குறைந்து ரூ.867.20 என்ற விலையில் எல்ஐசியின் பங்குகள் பட்டியலிடப்பட்டன.

பாலிசிதாரரகள், பணியாளரள் மற்றும் சில்லறை முதலீட்டாளர்களுக்கு அளிக்கப்பட்ட தள்ளுபடி விலையைக் காட்டிலும் குறைவாகவே எல்ஐசியின் பங்குகள் சந்தையில் பட்டியலாகின.

பங்குச் சந்தையில் வா்த்தக நேரம் முழுவதும் வெளியீட்டு விலைக்கும் குறைவாகவே எல்ஐசியின் பங்குகள் வர்ர்த்தகமாகின. வரத்தகத்தின் இறுதியில், எல்ஐசி பங்கின் விலை மும்பை பங்குச் சந்தையில் ரூ.875.45-ஆகவும், தேசிய பங்குச் சந்தையில் ரூ.873-ஆகவும் நிலைபெற்றன. வர்த்தகத்தின் இடையே இந்நிறுவனப் பங்கின் விலை குறைந்தபட்சமாக ரூ.860 வரை சென்றது.

தேசிய பங்குச் சந்தையில் எல்ஐசியின் 4.87 கோடி பங்குகளும், மும்பை பங்குச் சந்தையில் 27.52 லட்சம் பங்குகளும் கைமாறின.

எல்ஐசி பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டதையடுத்து, அதிக சந்தை மூலதனத்தைக் கொண்ட நிறுவனங்களின் பட்டியலில் ரூ.5.54 லட்சம் கோடி சந்தை மூலதனத்துடன் அந்த நிறுவனம் முன்னணி 5 நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கணிக்க இயலாது என விளக்கம்:

பங்குச் சந்தை நிலவரம் கணிக்க முடியாத ஏற்ற இறக்கமான நிலையில் உள்ளது. அதன் காரணமாகவே, எல்ஐசியின் பங்குகள் சந்தையில் பலவீனமான நிலையில் அறிமுகமாகியுள்ளது. நீண்ட கால மதிப்பு அடிப்படையில் ஆதாயத்தைப் பெற பங்குகளை முதலீட்டாளர்கள் தக்க வைக்க வேண்டும் என முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை (டிஐபிஏஎம்) துறையின் செயலர் துஹின்காந்த பாண்டே செய்தியாளர்களிடம் (மே-17) நேற்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here