இந்திய பங்குச் சந்தைகள் புதன்கிழமை (இன்று) காலை முதல் சரிவுடன் காணப்படுகின்றன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 177.56 புள்ளிகள் சரிந்து 32,996.83 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 55.30 புள்ளிகள் சரிந்து 10,128.85 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.94ஆக உள்ளது.

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவின் பங்குகள் 1.44 சதவிகிதம் உயர்ந்து காணப்படுகிறது. முந்தைய வர்த்தக நாளான செவ்வாய்க்கிழமையன்று, விப்ரோ நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை 274.05 ரூபாயாக இருந்தது. தற்போது அதன் விலை 278.00 ரூபாயாக உள்ளது. அதேபோன்று டிசிஎஸ், டெக் மகேந்திரா, உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றத்துடன் காணப்படுகின்றன. ஐடி நிறுவனங்களைத் தவிர, வங்கி, மெட்டல், ரியல் எஸ்டேட், ஆட்டோ மொபைல் உள்ளிட்ட துறைகள் சரிவில் காணப்படுகின்றன.

இதையும் படியுங்கள்: ’மக்களை மதிக்காமல் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையை தமிழக அரசும் எதிர்க்கட்சிகளும் எதிர்க்க வேண்டும்’: பூவுலகின் நண்பர்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்