தேனாண்டாள் ஸ்டுடியோஸ் அதிக படங்களை தயாரித்து, அதிக படங்களை விநியோகித்து வந்தது. 300 கோடி பட்ஜெட்டில் சங்கமித்ரா படத்தை தயாரிப்பதாக அறிவித்ததுடன் அரை டஜன் வேறு படங்களை தயாரிக்கவும், ஒரு டஜன் படங்களை விநியோகிக்கவும் வாக்களித்திருந்தது.

இந்நிலையில் மெர்சல் படம் வெளிவந்து மாபெரும் வசூலை பெற்றது. நியாயமாக தேனாண்டாள் ஸ்டுடியோஸ் அறிவித்ததைவிட அதிக படங்களை தயாரிக்க, விநியோகிக்க செய்திருக்க வேண்டும். மாறாக ஏற்கனவே தொடங்கிய இறவாக்காலம் தவிர்த்து தங்களது அனைத்து புராஜெக்ட்களையும் கிடப்பில் போட்டனர். இறவாக்காலம் படத்தின் தொழிலாளர்ளுக்கும் சம்பளபாக்கி வைத்தனர். பெப்சி சார்பில் பஞ்சாயத்து பேசி கொஞ்சம் தொகையை செட்டில் செய்தனர். ஆனால், உதவி இயக்குநர்கள் போன்ற சில தரப்பினருக்கு இன்னும் சம்பளம் தரவில்லை. கடந்த ஒருவருடமாக சம்பளம் வராமல் அவர்கள் கஷ்டப்படுகின்றனர்.

ஒரு வருடம் பொறுத்துப்பார்த்த இறவாக்காலம் படத்தின் அசோஸியேட் டைரக்டர் பாலாஜி ஆத்மநாதன் தேனாண்டாள் ஸ்டுடியோஸுக்கு திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தின் சுருக்கம்

அந்தக் கடிதத்தில்
மதிப்பிற்குரிய தேனாண்டாள் ஸ்டுடியோஸுக்கு….

தமிழ் சினிமாவின் பெருமையை கூறும் தமிழ் சினிமா மெர்சலை தயாரித்திருக்கும் நீங்கள் எப்ப்போது எங்கள் சம்பளத்தை தருவீர்கள்?
உங்களுக்கு என்னை ஞாபகம் இருக்காது நான் இறவாக்கால்ம் படத்தில் அசோஸியேட் டைரக்டராக பணிபுரிந்த பாலாஜி ஆத்ம்நாதன் . அந்த படத்தை முடிப்பதற்காக நான் சேமித்து வைத்த காசை கொடுத்திருக்கிறேன்.

உங்கள் குழு மெர்சல் படத்தை எந்த சினிமா விழாக்களுக்கு அனுப்பி தமிழ் சினிமாவின் பெருமையை சொல்லலாம் என்று கூகுள் பண்ணி பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

விருதுக்காக மற்ற நாடுகளுக்கு நீங்கள் செலவு செய்யும் பணம் எங்களுடைய பணம் , எங்களுடைய சம்பளப் பணம் .

நான் வெறும் தட்டை வைத்திருக்கும் போது என் மனைவி என்ன செய்கிறீர்கள் என்று கேட்டாள் அப்போது நான் சொன்னேன் பெருமையை (Pride) சாப்பிடுகிறேன் என்று. என் வீட்டு சொந்தக்காரர் வாடகைக் கேட்டு மெசேஜ் செய்திருந்தார் அதற்கு பதிலாக நான் பெருமை (Pride) என்று பதிலளித்தேன் .

நீங்கள் தமிழ் சினிமாவின் பெருமையை உலகுக்கு சொல்லி முடித்தபின் எனக்கு ஃபோன் செய்யுங்கள் , நான் வந்து என் சம்பள பாக்கியை வாங்கிக் கொள்கிறேன். அந்த நாளில் நான் உயிரோடிருக்க வேண்டும் . நான் உயிரோடு இல்லை என்றால் என் பேரக் குழந்தைகளிடம் கொடுத்து விடுங்கள்

iravaakalam

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்