சம்ஜௌதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து 4பேரை விடுதலை செய்தது என்ஐஏ சிறப்பு நீதிமன்றம்

டெல்லி – லாகூர் (பாகிஸ்தான்) இடையே வாரம் இருமுறை சம்ஜௌதா விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில், கடந்த 2007, பிப்ரவரி 18-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் இரு பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. ஹரியானா மாநிலம், பானிபட் அருகே நிகழ்ந்த இச்சம்பவத்தில், 68 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானியர்கள் ஆவர்.

இதுதொடர்பான வழக்கில், ஹரியானா மாநிலம், பஞ்ச்குலாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், சுவாமி அஸீமானந்த் உள்ளிட்ட 8 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இந்த குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டதாக கருதப்பட்ட சுனில் ஜோஷி, கடந்த 2007-இல் டிசம்பரில் கொலையானார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேலும் 3 பேர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர்.
இந்த வழக்கில் இறுதி வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது . இந்த தீர்ப்பில் சுவாமி அஸீமானந்த் உட்பட 4 பேரை விடுதலை செய்திருக்கிறது என்ஐஏ சிறப்பு நீதிமன்றம்.

இதையும் படியுங்கள் ; மெக்கா மசூதி வெடிகுண்டு வழக்கில் அனைவரும் விடுதலை; தீர்ப்பு வழங்கிய பின்னர் பதவியை ராஜினாமா செய்த நீதிபதி