பிரதமர் மோடியின் டிவிட்டர் பதிவுகளைவிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் டிவிட்டர் பதிவுகள் மக்களிடம் அதிகம் பேசப்பட்டிருக்கின்றன. ராகுல் காந்தியின் டிவிட்டர் பதிவுகளை அதிகம் பேர் லைக் செய்தும், ரீ டிவீட் செய்தும், டிவீட்டுக்கு பதிலளித்தும் உள்ளனர்.

Master

Master-1

ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டவை பெரும்பாலும் மோடி பற்றிய விமர்சனங்கள் , விவசாயி பிரச்சனைகள், வேலையின்மை பற்றியே இருந்தது. அதே சமயம் பிரதமர் மோடியின் டிவிட்டர் பதிவுகள் அரசு பற்றியும், அரசின் புதிய முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பற்றி இருந்தது.

Master-2

Master-3

ராகுல் காந்தியின் டிவீட் எவ்வாறு அதிகம் பேரால் லைக் செய்யப்பட்டும், ரீ டிவீட் செய்யப்பட்டும், டிவீட்டுக்கு பதிலளித்ததும் எவ்வாறு நடந்தது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

Master-4

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற பிறகு அவரது டிவிட்டர் பதிவுகள் மோடியின் டிவிட்டர் பதிவைவிட அதிகம் பேரால் பேசப்பட்டுள்ளது. அவரை விமர்சிப்பவர்களில் சிலர் இதற்கு காரணம் ராகுல் காந்தியின் சுயவிளம்பரம்தான் என்கிறார்கள். பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை ராகுல் காந்தி கவனமாக கையாண்டு அதுபற்றி டிவீட் செய்வதாலேயே அவரது டிவீட்டுகள் அதிகம் பேரால் பேசப்படுகிறது என்று ராகுலை பின்தொடர்பவர்கள் கூறுகிறார்கள் .

Master-5

டிவிட்டரில் ராகுல் காந்தி மோடியை விமர்சித்து டிவீட் செய்து வருகிறார். ஆனால் பொது மேடைகளில் பிரதமர் மோடி ராகுல் காந்தி குடும்பத்தை வசைமாரி பொழிந்து வருகிறார். ஆனால் டிவிட்டரில் மோடி அத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுவதில்லை . 2017 ஆம் ஆண்டில் ராகுல் காந்தி பதிவிட்ட 1381 டிவீட்டுகளில், 104 டிவீட்டுகளில் மோடி அல்லது பிரதமர் என்ற வார்த்தைகளை குறிப்பிட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டு மோடி காந்தி என்ற வார்த்தையை 9 முறை டிவீட்டுகளில் பதிவிட்டுள்ளார். எவ்வாறென்றால் மேனகா காந்தி, மகாத்மா காந்தி மற்றும் ராகுல் கௌசிக் என்று குறிப்பிடும்போது வந்த வார்த்தைகளே அவை.

விவசாயிகள் பற்றிய டிவீட்

2017 ஆம் ஆண்டு விவசாயிகள் பற்றி மோடியும், ராகுலும் ஒரே எண்ணிக்கையில் டிவீட் செய்திருந்தார்கள் , ஆனால் மோடியின் டிவீட் அதிகம் பேரால் பகிரப்பட்டது, பேசப்பட்டது. 2018 ஆம் ஆண்டு ராகுல் காந்தியைவிட மோடி தான் விவசாயிகள் பற்றி அதிகம் டிவீட் செய்திருந்தார். ஆனால் ராகுல் காந்தியின் டிவீட் அதிகமானாரோல் பகிரப்பட்டது, பேசப்பட்டது, லைக் செய்யப்பட்டிருந்தது .

Master-6

வேலையின்மை பற்றிய டிவீட்

வேலையின்மை பற்றி ராகுல் காந்தி மோடியை விட அதிகமாக டிவீட் செய்திருந்தார் அதனால் அவரது டிவீட்டுகள் அதிகம் பேரால் பகிரப்பட்டது, பேசப்பட்டது, லைக் செய்யப்பட்டது.

Master-7

2017 ஆம் ஆண்டு , சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியதைவிட திறமையாக, 2018 ஆம் ஆண்டு ராகுல் காந்தியும் , காங்கிரஸ் கட்சியும் பயன்படுத்தியுள்ளார்கள். மோடியும் , பாஜகவும் தனிப்பட்ட முறையிலான தாக்குதல்களை அவர்களது கட்சித் தொண்டர்களிடையே விட்டிருக்கிறது . ஹிந்தி அதிகம் பேசும் மாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தான் , சட்டீஸ்கர் மாநிலங்களில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் சமூக ஊடகங்களில் காங்கிரஸ் உரக்க எழுப்பிய ஒலி மக்களுக்கு கேட்டதாகவே பார்க்கப்படுகிறது .

Courtesy : Times of India

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here