சமூக வலைத்தளங்களில் கொலை மிரட்டல் : ஃபேஸ்புக் இந்திய நிறுவன அதிகாரி புகார்

Public policy director of Facebook India, South and Central Asia, Ankhi Das, has filed a complaint with the Delhi Police against a number of people who allegedly issued "violent threats" to her online.

0
154

சமூக வலைத்தளங்களில் தனக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக, ஃபேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் பொதுக் கொள்கை இயக்குநர் அன்ஹி தாஸ், டெல்லி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

ஃபேஸ்புக் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள வலதுசாரி இயக்கங்களின் பக்கங்களுக்குச் சார்பாக நடந்து கொள்கிறது என்று சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. முக்கியமாக ஃபேஸ்புக் வலதுசாரி ஆதரவாளர்களின் வெறுப்பை விதைக்கக்கூடிய பதிவுகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறது என்பதை ஆதாரங்களுடன் முன் வைத்து கேள்வி எழுப்பிய மூத்த பொறியாளர் ஒருவரை ஃபேஸ்புக் பணி நீக்கம் செய்ததது பெரும் சர்ச்சைஏற்படுத்தியது.

அதேபோல இந்தியாவிலும் பா.ஜ.கவை சார்ந்தவர்கள் பதிவிடும் வெறுப்பு பேச்சு மற்றும் ஆட்சேபனைக்குரிய விஷயங்களை ஃபேஸ்புக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறது என அமெரிக்காவின் தி வால் ஸ்டிரீட் ஜேர்னல் பத்திரிகை கட்டுரை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் பாஜகவோடு தொடர்புடைய சிலர், வெறுப்பு, வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்டபோதிலும், விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டாம் என பேஸ்புக்  ஊழியர்களுக்கு அந்நிறுவனத்தின் பொதுக் கொள்கைக்கான இந்திய பிரிவு இயக்குநர் அன்ஹி தாஸ் அறிவுரை வழங்கியதாகவும், பாஜகவோடு தொடர்புடையவர்களை பாதிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தால் வணிக நலன்கள் பாதிக்கப்படும் என்று அன்ஹி தாஸ் கூறியதாகவும் அந்தப் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக  அன்ஹி தாஸ் டெல்லி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். ஃபேஸ்புக், டிவிட்டர் பதிவர்கள் சிலரது பெயரையும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here